திருப்பூர் மாநகரில் கண்காணிப்பை தீவிரப்படுத்த காவல் துறைக்கு அதிநவீன ட்ரோன் கேமரா

By செய்திப்பிரிவு

தன்னார்வலர்கள் சார்பில் திருப்பூர் மாநகர காவல் துறைக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பிலான அதிநவீன தெர்மல் ட்ரோன் கேமரா நேற்று வழங்கப்பட்டது.

திருப்பூர் மாநகரில் குற்றங்களை தடுக்கவும், கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தவும் காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு துணைபுரியும் விதமாக தன்னார்வலர்கள் மெஜஸ்டிக் கந்தசாமி, க.நவநீதகி ருஷ்ணன் ஆகியோர் சார்பில், ரூ.4.5 மதிப்பிலான அதிக திறன் மற்றும் நவீன தெர்மல் ட்ரோன் கேமரா மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயனிடம் நேற்று வழங்கப்பட்டது. இதற்காக, அவர்களை காவல் ஆணையர் பாராட்டினார்.

இதுகுறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயில் விழாக்கள், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கியப் பண்டிகைகளையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களை கண்காணிக்கவும், அரசியல் கட்சிகள், அமைப்புகள் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்ற நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும், குற்றவாளி களை கண்டுபிடிக்கவும் இந்த கேமரா உதவும்.

இந்த ட்ரோன் கேமராவை வைத்து இரவு நேரங்களிலும் கண்காணிக்க முடியும். நான்கு கி.மீ. தூரம் வரை சென்று படம் பிடிக்கக்கூடிய தொழில்நுட்பமும், கண்காணிப்பு அறையில் இருந்து கொடுக்கக்கூடிய உத்தரவுகளை 4 கி.மீ. சுற்றளவுக்குள் ட்ரோனில் உள்ள ஒலிப்பெருக்கி மூலமாக அறிவிக்கவும் முடியும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்