செஞ்சி சுற்றுவட்டாரப் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்தவ ருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செஞ்சி அருகே திருவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மன் (எ) மன்நாராயணன் (58). இவர்மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சீட்டு நடத்தி வந்துள்ளார். கூடுதலாக சீட்டு ஏலக்கழிவு வழங் குவதாகக் கூறியதை நம்பி, பலர் இந்த ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பணம் செலுத்தியவர்களுக்கு, முதிர்வுகாலம் முடிந்த நிலையிலும் பணம் வழங்காமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து, ஏலச்சீட்டு பணம் கட்டியவர்கள் , விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தனர்.
இப்புகாரின் பேரில், மன் நாராயணன், அவருக்கு உடந் தையாக இருந்த கப்பை கிராமத்தைச் சேர்ந்த குமார் (46) ஆகியோர்மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீஸாரின் விசாரணையில், டாக்டர் உள்ளிட்ட 12 பேரிடம் ரூ.11,15,950 மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அவர்களிடம் ஆவணங்களை கைப்பற்றிய போலீஸார் மன்நாராயணன், குமார் ஆகியோரை கைது செய்த னர். இவ்வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன் றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றவியல் நடுவர் (பொறுப்பு) கோபிநாத் நேற்று தீர்ப்பளித்தார்.
அதில், மன்நாராயணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளார். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் குமார், இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறை தண்டனை விதிக்கப்பட்ட, மன்நாராயணன் கடலூர், மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago