தேனி ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் அதிமுக பெண் கவுன்சிலர்கள் தர்ணா

By செய்திப்பிரிவு

தங்களின் வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படாததைக் கண்டித்து தேனி ஊராட்சி ஒன்றிய பெண் கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

தேனியில் ஊராட்சி ஒன்றியக் கவுன்சில் கூட்டம் தலைவர் சக்கரவர்த்தி தலைமையில் நடைபெற்றது.

அதிமுக கவுன்சிலர்கள் சங்கீதா, அன்புமணி ஆகியோர் பேசுகையில், "எங்களுடைய வார்டுகளில் வளர்ச்சிப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்பட வில்லை. தலைவர் வார்டில் மட்டும் அதிகப் பணிகள் நடைபெறுகின்றன" என்றனர். பின்னர், இதைக் கண்டித்து கூட்ட அரங்கின் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பதிலளித்த தலைவர் சக்கரவர்த்தி, "என்னுடைய வார்டில் போடி அதிமுக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பணிகள் நடைபெறுகின்றன. ஊராட்சி ஒன்றிய நிதிக்கும் அப்பணி களுக்கும் சம்பந்தமில்லை" என்றார்.

தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள் சங்கீதா, அன்புமணி, "15-வது நிதி மானியக்குழு திட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும்" என்றனர்.

அதற்குப் பதிலளித்த தலைவர், "இது மத்திய அரசின் அனைவருக்கும் குடிநீர்த் திட்டமாகும். மாவட்ட நிர்வாகம் மூலம் பணி மேற்கொள்ளப்படுகிறது" என்று விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து 2 பெண் கவுன்சிலர்களும் போராட்டத்தைக் கைவிட்டனர்.

அதன்பின் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்