ஊத்தங்கரை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் நொச்சிப்பட்டி கிராமத்தில் சிலர் ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, ஊத்தங்கரை வட்ட வழங்கல் அலுவலர் அருள்மொழி மற்றும் வட்ட வழங்கல் ஆய்வாளர் சென்றாயன் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது, ராமமூர்த்தி என்பவரது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு சோதனை செய்த அலுவலர்கள் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ‘‘அரசு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை, உள்ளூர் மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி சிலர் கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.
இதனை வாங்கும் நபர்கள், வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்கின்றனர்,’’ என்றனர். இதுதொடர்பாக புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago