ஒன்றியக் குழுத் தலைவரைக் கண்டித்து கறம்பக்குடி ஒன்றிய பணியாளர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக உள்ளவர் மாலா ராஜேந்திரதுரை. திமுக வைச் சேர்ந்த இவர், அரசு நிகழ்ச்சிகள் குறித்து தனக்கு எந்த தகவலையும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் தெரிவிப்பதில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து, அறிக்கை தாக்கல் செய்ய புதுக்கோட்டை ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வழக்கு தொடர்ந்த ஒன்றியக் குழுத் தலைவரைக் கண்டித்து, ஒன்றிய அலுவலகத்தில் பணி யாற்றும் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திறக்கப்படவில்லை. பல்வேறு பணிகள் தொடர்பாக அலுவலர்களைச் சந்திக்க வந்த பொதுமக்கள் வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் ெசன்றனர். ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் மாலா ராஜேந்திரதுரை தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்திலும் தலைவரைக் கண்டித்து, கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்