வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டல பகுதிகளில் உள்ள 96 சிறு பூங்காக்களை பராமரிக்க தொண்டு நிறுவனங்களிடம் வழங் குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடை பெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் 96 சிறு பூங்காக்கள் உள்ளன. இவை, மாநகராட்சி மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காக்களில் புதிதாக மரக்கன்றுகள் நட்டும், நடைபாதையை நீட்டித்தும், குறைந்த அளவிலான மின்சார வெளிச்சத்தில் மின்விளக்குகள் அமைத்து, ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், குடியிருப்பு நலச் சங்கங் கள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் பராமரிக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 96 சிறு பூங்காக் களில் முதற் கட்டமாக 34 பூங்காக் கள் பராமரிப்புப் பணிக்காக வழங் கப்படுகிறது. மாநகராட்சியால் ஏற்கெனவே பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு, மின்சார இணைப்பு செலவினங்களையும் மற்றும் குடிநீர் தொட்டி, மின் சாதனங்கள் உள்ளிட்டவைகள் மாநகராட்சியால் அமைத்து கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் மாநகராட்சி நிர்வாகமே பழுதடையும்போது சரி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொண்டு நிறுவனங்கள், குடியிருப்பு நலச்சங்கங்கள், சிறுவர்கள் விளையாடுவதற்கு வேண்டிய விளையாட்டு உபகரணங்களை ரூ.5 ஆயிரத்துக்கு கீழே அமைத்து பொதுமக்கள் பயன்படக்கூடிய பொழுது போக்கு அம்சங்களை தொண்டு நிறுவனங்களே ஏற்படுத்திக்கொள்ளலாம்.
அதேபோல், பூங்காக்களில் மாடுகள் நுழைவதை தடுக்கவும், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீதும், மது அருந்துபவர்கள் பூங்காக்களில் நுழைவதையும் நடமாடுவதைக் தொண்டு நிறுவனங்களே தடை செய்ய வேண்டும். அந்தந்த பகுதியில் உள்ள சிறு பூங்காக்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும்’’என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் சங்கரன், பொறியாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago