தூய்மை பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மறு சீரமைப்பு குழு ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் ஆட்சியர் சிவன் அருள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களின் மறு சீரமைப்புக் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் மனித கழிவுகளை அகற்றும் உன்னதப்பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு சக மனிதர்களுக்கு வழங்கப்படும் அனைத்து மரியாதைகளும் வழங்கப்படுகிறதா? என்பதை அரசு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் விதிமுறை களை செயல்படுத்திட வேண்டும்.

தாட்கோ வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூலம் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி, தொழில் மற்றும் பொரு ளாதார முன்னேற்றத்துக்கு தேவையான வங்கி கடனுதவி பெற்று தந்து சமூக பொருளாதார மறுவாழ்வு அவர்களுக்கு ஏற்பட ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

அதேபோல, தூய்மைப் பணி யாளர்களுக்கு மாதந்தோறும் மருத்துவ முகாம் நடத்தி அவர் களின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும். வாணியம்பாடி, ஜோலார்பேட்டை நகராட்சி பகுதி களில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிப்பறை தொட்டிகளை சுத்தம் செய்வதை நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையாளர்கள் கண்காணிக்க வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து நகராட்சி பகுதிகளில் கழிப்பறை தொட்டிகள் சுத்தம் செய்ய ரோபாடிக் இயந்திரங்களை பயன்படுத்தலாம். மனித கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியாளர்களின் நலனை பாதுகாக்க மாவட்ட அளவில் நிலைக்குழு அமைக்கப் பட்டுள்ளது.

இக்குழுவினர்களுக்கான முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை மேம்பாடு, உடல் ஆரோக்கியம் மற்றும் பணி செய்யும் சூழலுக்கு ஏற்ப வசதிகள் செய்து தருவது குறித்த கருத்துகளை தயங்காமல் அவ்வப்போது என்னிடம் தெரிவிக்கலாம்’’ என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அருண், நகராட்சி ஆணையாளர்கள் சவுந்திரராஜன் (ஆம்பூர்), சத்தியநாதன்(திருப்பத்தூர்), ராமஜெயம் (ஜோலார்பேட்டை), வழக்கறிஞர்கள் ஆனந்தராஜ், முருகேசன் மற்றும் நிலைக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்