திருவண்ணாமலையில் 3-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 177 அரசு ஊழியர்கள் கைது

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் 3-வது நாளாக நேற்று நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்ற 177 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தற்காலிக பணி நீக்கம் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள நான்கரை லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டம் திருவண்ணாமலையில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது.

இந்த போராட்டம் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது. அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக வந்த அரசு ஊழியர்கள், பெரியார் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதை யடுத்து, மறியலில் ஈடுபட்ட 177 அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்