புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்ற மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராணி தலைமை வகித்தார். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொடர்ந்து நடந்த மறியல் போராட்டத்தை, மாநில செயலாளர் பரமேஸ்வரி தொடங்கி வைத்தார். அப்போது சத்துணவுப் பணியாளர்பரிமளா (50) என்பவரை போலீஸார் ஒருவர் தாக்கியதாகக்கூறி மறியலில் ஈடுபட்டவர்கள்முழக்கங்கள் எழுப்பினர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், 100 பெண்கள் உட்பட 150 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
மனித உரிமை ஆணையத்தில் புகார்
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கூறும்போது, ‘‘மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊழியரை, ஆண் காவலர் தாக்கியுள்ளார். இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம்,டிஐஜி மற்றும் மாநகரக் காவல் ஆணையர் ஆகியோருக்கு இணையம் வாயிலாக புகார் அளித்துள்ளோம். பெண் ஊழியரைதாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மண்டபத்தில் போலீஸார் வழங்கிய மதிய உணவை உண்ணாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்’’ என்றனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago