கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இது வரை 29 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப் பட்டுள்ளதாக கே.பி.முனுசாமி எம்பி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி கிராமத்தில், அம்மா கிளினிக்கை கே.பி.முனுசாமி எம்பி திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: தமிழக முதல்வரின் புதிய முயற்சியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்கள், ஏழை எளிய மக்கள் அதிகம்வசிக்கும் இடங்கள் மற்றும் மலைக் கிராமங்களை கண்டறிந்து சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட நோய் களுக்கு உடனடியாக அந்த பகுதிகளிலேயே சிகிச்சை பெறக்கூடிய வகையில், அம்மா கிளினிக் குகள் திறக்கப்படுகின்றன. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 25 அம்மா மினி கிளினிக்தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடிபுதூர், பென்ரப் பள்ளி, சோக்கடி, செம்படமுத்தூர் உள்ளிட்ட 4 ஊராட்சிகள் என மொத்தம், 29 அம்மா மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 60 கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா தாய் சேய் ஊட்டச்சத்து நல பெட்டகங்கள் வழங்க ப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் எம்பி அசோக்குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கோவிந்தன், தொற்றா நோய் ஒருங்கிணைப்பாளர் திரிலோகம், வட்டார மருத்துவ அலுவலர் சுமித்ரா, ஒன்றியக் குழுத் தலைவர் அம்சாராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago