திண்டுக்கல்லில் கரோனா முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தடுப்பூசி செலுத்திக்கொண்டு தொடங்கிவைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட நலப்பணிகள் இணைஇயக்குனர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமி கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை களசூழலில் செயல்படுத்தும் நடைமுறைகளை சோதனை செய்வது மற்றும் சவால்களை அடையாளம் காண்பது குறித்த

ஒத்திகை கடந்த 8 ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஜனவரி 16 ம் தேதி தடுப்பூசி செலுத்த தேர்வு செய்யப்பட்ட மருத்துவபணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை திண்டுக்கல் மாவட்டத்தில் 3.300 மருத்துவபணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்பசுகாதாரநிலையம் என மொத்தம் 13 இடங்களில் கரானோ தடுப்பூசி செலுத்தும்பணி நடைபெற்றுவருகிறது. பயனாளிகள் எங்கே, எப்போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளமுடியும் என்ற தகவல் அவர்களுக்கு அனுப்பப்பட்டுவருகிறது, என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்