விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறையினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கியது.
கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படையில், கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கு கோவிஷில்டு தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி தொடங்கப்பட்டு.
தற்போது, 2-ம் கட்டமாக அரசு அலுவலர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று காலை தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களசுப்பிரமணியன் முதல் நபராக பங்கேற்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து, வருவாய்த்துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஒரு நாளைக்கு சுமார் 200 பேருக்கு இத்தடுப்பூசி போடப்படுகிறது. சுமார் 2 ஆயிரம் பேருக்கு இம்முகாமில் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் 25 நாள்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago