படைப்புழு தாக்குதலால் பாதிப்பு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் மக்காச்சோள விவசாயிகள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டும் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலால் மக்காச்சோளப் பயிர்கள் மிகவும் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி உள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமையில், விவசாயிகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணனிடம் மனுக்கொடுத்தனர்.

இதுகுறித்து, நாராயணசாமி கூறியதாவது: மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 57 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அதில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவிட்ட விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகினர்.

அதோடு, பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுத்த வேளாண் மற்றும் புள்ளியியல் துறையில் முறையாக அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு செய்து கணக்கிடப்படவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்