வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் முறைகேடு

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசலைச் சேர்ந்தவர் கல்லூர் ரகுமான். இவர் சிவகங்கை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் செயலாளராக உள்ளார். இவர் தனது 2 மகன்களை சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதற்காக, பரமக்குடியைச் சேர்ந்த தனியார் வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் அருண்குமார் என்பவரை அணுகியுள்ளார். அதன்பின் முன்பணமாக 18.11.2019-ல் அருண்குமாரிடம் ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்ற அருண்குமார் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெளிநாட்டுக்கும் அனுப்பாமல், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து கல்லூர் ரகுமான் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக்கிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்