சிறுவனைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செங்கோட்டுவேல் (35). கூலித் தொழிலாளியான இவர் கடந்த 2019 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடுமுடி ஆற்றில் குளிக்க வந்த 14 வயது சிறுவனை, ராசிபுரத்துக்கு கடத்திச் சென்று அங்கு 3 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த கொடுமுடி போலீஸார், சிறுவனை மீட்டனர். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் செங்கோட்டுவேலை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாலதி, சிறுவனைக் கடத்திய குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, பாலியல் தொந்தரவினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து ரூ.1 லட்சம் தமிழக அரசு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago