புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு, பழைய ஓய்வூதியதிட்டத்தை தொடர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2-ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
தூத்துக்குடியில் நேற்று முன்தினம் சங்க மாவட்ட தலைவர் து.செந்தூர்ராஜன் தலைமையில் மறியல் நடைபெற்றது. அவர்கள்கைது செய்யப்பட்டு திருமணமண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலை 5 மணிக்கு அவர்களை போலீஸார் விடுவித்தபோது, அரசு ஊழியர் சங்கத்தினர் மண்டபத்தை விட்டு வெளியே செல்ல மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு 8 மணியளவில் டிஎஸ்பி கணேஷ் அங்கு வந்து, மண்டபத்தில் மறுநாள் (பிப்.3) தனியார் நிகழ்ச்சி உள்ளது. எனவே, மண்டபத்தை விட்டு வெளியே செல்லவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அரசு ஊழியர் சங்கத்தினர் அங்கிருந்து வெளியேறி, டூவிபுரம் 2-வது தெருவில் உள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு சென்று, அங்கு அமர்ந்து இரவு முழுவதும் போராட்டத்தை தொடர்ந்தனர். 2-வது நாளாக நேற்றும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. சுமார் 200 பேர் இதில் பங்கேற்றனர்.
திருநெல்வேலி
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், 2-வது நாளாக நேற்று திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகவளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர்பார்த்தசாரதி தலைமை வகித்தார்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியல்போராட்டம் நடந்தது.இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக அரசு ஊழியர்கள் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago