நளினியை சந்தித்து பேச சிறைத்துறையிடம் முருகன் மனு

By செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் 15 நாட்களுக்கு ஒரு முறை சந்தித்துப் பேச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவ டிக்கை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் முருகன்-நளினி சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இருவரும் சிறைத்துறை அனுமதியுடன் செல்போன் மூலம் ‘வாட்ஸ் -அப்’ வீடியோ காலில் 15 நாட்களுக்கு ஒரு முறை பேசி வந்தனர்.

இதற்கிடையே, சிறைத் துறை அதிகாரிகளின் கண்காணிப்பை யும் மீறி முருகன் வெளிநாட்டில் உள்ள தனது உறவினர்களு டன் வீடியோ காலில் பேச முயன்றதாக புகார் எழுந்தது. மேலும், முருகன் அறையில் செல்போன், சிம்கார்டு உள்ளிட்டவைகளை சிறைத்துறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, முருகன், நளினியுடன் செல்போன் வாட்ஸ் -அப் வீடியோ காலில் பேச சிறைத்துறை நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த முருகன் சிறையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்தது. பின்னர், மருத்துவரின் அறிவுரையை ஏற்று முருகன் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார்.

இந்நிலையில், கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு வழங்கியிருப்பதை தொடர்ந்து, சிறையில் மற்ற கைதிகள் தங்களது உறவினர்களை சந்தித்துப் பேச சிறைத்துறை நிர்வாகம் அனுமதி வழங்கி வருகிறது. இதையறிந்த முருகன் தனது மனைவி நளினியை சந்தித்துப் பேச தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என சிறைத்துறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினியிடம் மனு அளித்துள்ளார்.

அம்மனுவில், சிறையில் தனக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை ரத்து செய்ய வேண்டும், நீதிமன்ற உத்தரவுபடி 15 நாட்களுக்கு ஒரு முறை நளினியை நேரில் சந்தித்துப் பேச அனுமதி வழங்க வேண்டும் என முருகன் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்