ஏலச்சீட்டு நிறுவனத்தை கண்டித்து சாலை மறியல்

By செய்திப்பிரிவு

திருப்பூர் - மங்கலம் சாலைகுமரன் கல்லூரி எதிரே தனியார் ஏலச்சீட்டு நிறுவனம் செயல்படுகிறது. இங்கு வாராந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் ஏலச்சீட்டுக்கு மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சீட்டு எடுத்தவர்கள் யாருக்கும், இந்நிறுவனம் பணத்தை தராமல் இழுத்தடிப்பு செய்து வந்ததாக தெரிகிறது. நிறுவன நிர்வாகிகள் உரிய பதில் அளிக்காததால், திருப்பூர்- மங்கலம் சாலையிலுள்ள நிறுவனத்தின் முன் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக மத்திய காவல் நிலைய போலீ ஸார் தெரிவித்து, அனைவரையும் அருகே உள்ள மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்துமறியலில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, "கடந்த சில ஆண்டுகளாகஇந்நிறுவனம் செயல்பட்டுவருகிறது. ரூ.1 லட்சம் முதல் பல்வேறு தொகைகளில் சீட்டு நடத்தப்படுகிறது. இதில் வாரம் ஒருமுறை, 10 நாட்களுக்கு ஒருமுறை, மாதம் ஒருமுறை அடிப்படையில் சீட்டுகள் படிக்கப்படுகின்றன.

சீட்டுகளுக்கு நாள்தோறும் ரூ.200 முதல் வெவ்வேறு அளவில்தொகைகள் வசூலிக்கப்படுகின்றன. இதில் சீட்டு எடுத்த பலருக்கும் கடந்த சில மாதங்களாக பணம் தராமல் இழுத்தடிப்பு செய்துவருகின்றனர். அதிகளவில் பணம்செலுத்தியுள்ளதால், போலீஸார் எங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்டஎங்கள் மீதே வழக்கு பதிவு செய்வதாக மிரட்டுகின்றனர். இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

போலீஸார் தரப்பில் கேட்டபோது, "இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஏலச்சீட்டு நிறுவன உரிமையாளரிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்