சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர், வனத்துறை, காவலர் மற்றும் ஊராட்சி எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7 ஆயிரத்து 850 தொகை வழங்க வேண்டும்.
முடக்கப்பட்ட 21 மாதநிலுவைத்தொகை, அகவிலைப்படி நிலுவை ஆகியவற்றை வழங்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் அனைத்து சிகிச்சைகளுக்கான செலவுத் தொகை முழுவதும் காப்பீடு நிறுவனமே ஏற்றுக்கொள்ள ஆணையிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும், என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை,திருப்பூரில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சிவானந்தாகாலனி பவர்ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டதுணைத்தலைவர் என்.அரங்கநாதன் தலைமைவகித்தார்.
இதேபோல திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்க மாநில உதவி தலைவர் சவுந்திரபாண்டியன் தொடங்கி வைத்து பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago