கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி காட்சி மூலம் விவசாயிகளுக்கான குறை தீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் 13 வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேளாண்துறையை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்ததாவது:
புயல், பருவம்தவறிய மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு வேளாண் துறை மூலம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 849 விவசாயிகளுக்கு 1 லட்சத்து 7 ஆயிரத்து 527 ஹெக்டேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நெற்பயிரில் 2,992 பயிர் அறுவடை பரிசோதனை திடல்கள் அமைக்கப்பட்டு 871 பயிர் அறுவடை பரிசோதனை திடல்களில் அறுவடை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகசூல் இழப்புக்கு ஏற்றவாறு காப்பீட்டுத்தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டிலேயே கடலூர் மாவட்டத்தில் அதிகளவில் நடப்பு ஆண்டு சம்பா பருவத்திற்கு 126 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago