காவல் துறை சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 'புன்னகையைத் தேடி' என்ற சிறப்பு திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் பொது இடங்களில் பிச்சையெடுக்கும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள், குழந்தை தொழிலாளர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அதன்படி துணை காவல் கண்காணிப்பாளர் ராமநாதன் , கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி மற்றும் போலீஸார் நேற்று கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிறுத்தத்தின் உள்ளே கடைகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும், குழந்தை தொழிலாளர்களை யாரும் பணிக்கு வைக்கக் கூடாது என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக்கிடம் கேட்டபோது, “மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 52 சிறுவர்கள் வரை காணாமல் போயிருந்தனர். அவர்களில் 46 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 6 பேரில் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலும், மேலும் ஒருவர் மும்பையில் உள்ள தனது பாட்டியிடம் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் 4 பேரை தேடி வருகிறோம். புன்னகையைத் தேடி திட்டத்தின் வாயிலாகக் கூட அவர்கள் கிடைக்க வாய்ப்புண்டு” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago