மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, செய்தியாளர்களிடம் கூறியது: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், முழுக்க முழுக்க பெரு முதலாளிகளுக்கு ஆதரவானதாக உள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர மக்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு பட்ஜெட்டில் எந்தத் திட்டமும் இல்லை.
தொடர்ந்து அவதூறாக பேசி வரும் பாஜக பிரமுகர் கல்யாணராமனை, தேசிய பாதுகாப்புச் சட்டம் அல்லது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து சட்டப்பேரவை உரையில் ஆளுநர் அறிவிப்பு வெளியிடவில்லை. அவரது உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் எங்கள் கட்சிக்கு கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago