குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39-வது வார்டில் குடிநீர் வழங்காததைக் கண்டித்து நேற்று காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை நகராட்சி 39-வது வார்டில் காமராஜர் நகர், கீழ்நாத்தூர், ஒத்தவாடை தெரு, வேட்டவலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின் றனர். இவர்களுக்கு, கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்க வில்லை. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், கழிவு நீர் கலந்து வந்துள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் குடிநீர் கிடைக்கா மல் அவதிப்பட்டு வந்த பொதுமக் கள், காலிக் குடங்களுடன் வேட்ட வலம் சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “எங்க ளுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் கிடைக்கவில்லை. குழாய் சேதமடைந்துள்ளதால், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், வேறு பகுதிக்கு சென்று குடிநீர் பிடித்து வருகிறோம். சேதமடைந்துள்ள குழாயை சீரமைத்து தடை இல்லாமல் குடிநீர் வழங்க ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். குழாயை சீரமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். பின்னர் அவர்கள் நகராட்சிக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர்.

இது குறித்து தகவ லறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருவண்ணாமலை வருவாய்த் துறையினர் மற்றும்காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களி டம் பேச்சு வார்த்தை நடத்தி, "சேதமடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இதையடுத்து சாலை மறியல் முடிவுக்கு வந்தது. இதனால், அந்த பகுதியில் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்