திருப்பூர் மாவட்ட கபாடி அணிக்கு 6-ம் தேதி வீரர், வீராங்கனைகள் தேர்வு

By செய்திப்பிரிவு

இத்தேர்வு போட்டியில் கலந்துகொள்ள 31.3.2001-க்கு பின் பிறந்திருக்க வேண்டும். சிறுவர்கள் 70 கிலோவுக்கு கீழும், சிறுமியர் 65 கிலோவுக்கு கீழும் இருக்க வேண்டும். அனைத்து சிறுவர், சிறுமியரும் அந்தந்த அணி சீருடையுடன் வர வேண்டும். வயது சான்றிதழ், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மதிப்பெண் சான்றிதழ், போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை இதில் ஏதாவது ஒன்று அசல் மற்றும் நகல் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும். போட்டிகளுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.100 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். வயது சான்றிதழ் கொண்டுவராத விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டார்கள். மேற்கண்ட சாம்பியன்ஷிப் போட்டியில் தேர்வு செய்யப்படும் ஜூனியர் சிறுவர், சிறுமியர் அணிக்கு, பயிற்சி முகாம் நடத்தி வரும் 19-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற உள்ள மாநில சாம்பியன்ஷிப் போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்