காவேரிப்பட்டணத்தில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் பன்னீர்செல்வம் தெருவில் அமைந்துள்ள மஹா மாரியம்மன் கோயிலை புதுப்பித்து, மஹா கணபதி, பாலதண்டாயுதபாணி, திரவுபதியம்மன், சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் ஐயப்பன் கோயில்கள் தனித்தனியாக மொத்தம் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இக்கோயில் களுக்கான மஹா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 5 மணிக்கு யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி நடந்தது.

காலை 9 மணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் கே.பி.முனுசாமி தலைமையில், கடம் புறப்பாடு, விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை, நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்