வகுப்பறைகளை சுத்தம் செய்யாத பள்ளிகள் மீது நடவடிக்கை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கரோனா பரவலை தடுக்க வகுப்பறைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கல்வியாளர்கள், பொதுமக்கள் கருத்துகளின் அடிப்படையில் 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் நடைபெறவுள்ளது. அதேபோல், கல்வியாளர்களிடம் கருத்துகள் கேட்டறிந்த பின்பு பிளஸ் 1 பொதுத்தேர்வு குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு 65 சதவீதமும், 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பிற்கு 55 சதவீதமும், 1 முதல் 8-ம் வகுப்பிற்கு 50 சதவீதமும் பாடத்திட்டம் நடத்தப்படுகிறது. டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி நிறுவனம் ஆன்லைன் மூலம் ஜே.இ.இ தேர்விற்கு பயிற்சி அளித்து வருகிறது. இதில் 750 மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர். விரைவில் 2000 மாணவர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரோனா பரவலை தடுக்க பள்ளி வகுப்பறைகள் தினமும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவுரையின் படி சுத்தம் செய்யாத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்