காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் தொடக்கம் 554 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்

By செய்திப்பிரிவு

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுமக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் 10 மாதங்களுக்கு பிறகு நேற்று நடைபெற்றது. 3 மாவட்டங்களிலும் 554 பேர்கோரிக்கை மனு அளித்தனர்.

காஞ்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, ஓய்வூதியத் தொகை, வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், விதவை உதவித் தொகைஉட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 174 மனுக்கள் வரப் பெற்றன. இம்மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பரிந்துரைத்தார். இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், திட்ட இயக்குநர் தர், தனித் துணை ஆட்சியர் சுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.

செங்கை ஆட்சியர் அலுவலத்தில் ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 169 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. சிறு, குறு தொழிலுக்கான வங்கி கடன் 36 பேருக்குரூ.8 லட்சம், ஆவின் பாலகம் அமைக்க 8 பேருக்கு ரூ.4 லட்சம், சாலை விபத்து நிவாரணமாக 78 பேருக்கு ரூ.50.15 லட்சம் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதில் வருவாய் கோட்ட அலுவலர்கள் செல்வம், ரவிச்சந்திரன், லட்சுமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஜெயதீபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

திருவள்ளூரில் ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 211கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. மாற்றுத் திறனாளி இருவருக்குரூ.1.24 லட்சத்தில் பெட்ரோல் ஸ்கூட்டர்கள், பார்வை திறனற்ற 80 பேருக்கு ரூ.9.60 லட்சத்தில் கைப்பேசிகள், 82 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10.84 லட்ச மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, தனித் துணை ஆட்சியர் பாலகுரு, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் நாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்