ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த நாள் விழா அமைச்சர் சி.வி. சண்முகம் மாலை அணிவித்து மரியாதை

By செய்திப்பிரிவு

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்தநாள் விழா அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.

திண்டிவனம் அருகே ஓமந் தூர் கிராமத்தில் பிறந்தவர் ராமசாமி ரெட்டியார். 1947-ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல்வராக பதவி ஏற்று 1949 வரை பதவி வகித்தார்.

இவரது ஆட்சிக் காலத்தில்1947-ம் ஆண்டு சென்னை கோயில் நுழைவு அதிகாரச் சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் செல்வதற்கான முழுஉரிமை பெற்றனர்.

ஜமீன் இனாம்தார் இவரது ஆட்சிக்காலத்தில் ஒழிக்கப்பட்டது.

ஓமத்தூரில் இவருக்கு கடந்த 2013-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.

நேற்று அவரது 127- வது பிறந்தநாளை முன்னிட்டு ஓமத்துார் நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசின் சார்பில் அமைச்சர் சி.வி சண்முகம் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி னார். இவ்விழாவில் ஆட்சியர் அண்ணாதுரை, எஸ்பி ராதாகி ருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் அனு, எம்எல்ஏக்கள் சக்கரபாணி, முத்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்