சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நேற்று 55-வது நாளாக போராட் டத்தில் ஈடுபட்டனர்.
அரசு நிர்வாகத்திற்கு உட்பட்ட சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கல்வி கட்டணம் வசூலிக்கக்கோரி மாணவ, மாண விகள் தொடர்ந்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன் தமிழக அரசு, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை சுகாதாரத்துறை நிர்வாகத்துக்கு மாற்றி அரசாணை வெளியிட்டது. ஆனால், கல்வி கட்டணத்தை பற்றி அரசு ஆணை வெளியிடக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 55- வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவ, மாணவிகள் ஒற்றைக்காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago