சின்னசேலம் அருகே வரதட்சணையால், மனைவி தற்கொலையான வழக்கில் அதிமுக பிரமுகருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி மகன் சூரியமூர்த்தி(36). அதிமுக பிரமுகர். இவருக்கும், தனலட்சுமி(24) என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
திருமணம் நடந்து சில மாதங்களில் இருந்து சூரியமூர்த்தி, இவரின் தந்தை கணபதி ஆகியோர் தனலட்சுமியிடம், நகை, பணம் வரதட்சணையாக கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர்.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிற்பதற்கு சீட் கேட்டுள்ளதாக கோரியும், தேர்தல் செலவுக்காக ரூ.20 லட்சம் பணம் தாய் வீட்டில் வாங்கி வரக்கோரி, சூரியமூர்த்தி, கணபதி ஆகியோர் தனலட்சுமியிடம் கேட்டுள்ளனர். இதையடுத்து, சீட் கிடைக்காததால், கார் வாங்குவதற்காக ரூ. 2 லட்சம் வாங்கி வரக்கோரி, கணவரும், மாமனாரும் கொடுமைபடுத்தினர்.
இதனால் மனமுடைந்த தனலட்சுமி, கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு, தீ வைத்து இறந்தார். இது குறித்து தனலட்சுமி சகோதரர் இளையராஜா அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸார் வரதட்சணை கொடுமை பிரிவின்கீழ் வழக்குகள் பதிந்து சூரியமூர்த்தியை கைது செய்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் (விரைவு) நேற்று கூறப்பட்டது. இதில், சூரியமூர்த்திக்கு ஏழாண் டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago