தேனி, தேவகோட்டை பகுதிகளில் சசிகலாவை ஆதரித்து அதிமுக நிர்வாகி போஸ்டர்

தேனியில் சசிகலாவை ஆதரித்து அதிமுக நிர்வாகி ஒருவர் போஸ்டர் ஒட்டி உள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றதும் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு அமமுக உருவானது. தற்போது சிறைத் தண்டனை முடிந்து சசிகலா கடந்த 27-ம் தேதி பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கரோனாவில் இருந்து குண மடைந்த அவர் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சசிகலா தற்போது பெங்களூரு வில் உள்ள தனியார் விடுதியில் தனிமைப்படுத்திக் கொண்டுள் ளார்.

இவருக்கு அதிமுக நிர்வாகிகள் சிலர் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை என்று கட்சித் தலைமை அறிவித்தது. இருப்பினும் இவரை வரவேற்று திருச்சி, நெல்லை உட்பட பல பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டினர். இதனால் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் பண்ணைசின்னராஜா, மாவட்ட இளைஞர் பாசறைத் தலைவர் ஏ.புதுராஜா ஆகியோர் சசிகலாவுக்கு ஆதரவாகப் போஸ்டர் ஒட்டினர்.

இந்நிலையில் பெரியகுளம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை அவைத் தலைவர் வைகை சாந்தகுமார் பெயரில் தேனியின் பல பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவாக நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், `தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற தீயாக வரும் தியாகத் தலைவி சின்னம்மா' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டரில் தலைமைச் செயலகத்தின் பின்னணியில் சசிகலா படம் உள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது படங் களும் இடம்பெற்றுள்ளன.

காரைக்குடிசசிகலாவை ஆதரித்து தேனியில் அதிமுக நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை ஆகிய பகுதிகளில் ‘தமிழகத்தின் எதிர்காலமே, துரோகத்தை வென்றெடுக்க வரும் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர், எங்களின் ராஜ மாதாவே’ என சசிகலாவை வரவேற்று அதிமுகவைச் சேர்ந்த கண்ணங்குடி ஒன்றிய ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் கே.ஆர்.பன்னீர்செல்வம், தேவகோட்டை ஒன்றிய இளைஞர் பாசறை முன்னாள் இணைச் செயலாளர் எம்.கலையரசன், முன்னாள் துணைத் தலைவர் ஜி.ஸ்டாலின் ஆகியோர் இணைந்து சுவரொட்டி ஒட்டியுள்ளனர். சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் போஸ் டர் ஒட்டியது அப்பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் கூறுகையில், ஏற்கெனவே எம்.கலையரசன், ஜி.ஸ்டாலின் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி விட்டோம். கே.ஆர்.பன்னீர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்கக் கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளோம் என்று கூறி னார்.

இதனிடையே, சிவகங்கை பகுதியில் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் சி.கண்ணன் என்பவரும் சசி கலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE