திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவுட்சோர்சிங் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மருத்துவ மனையில் பணியாற் றும் சிஐடியு சார்பிலான அவுட்சோர்சிங் ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக அரசு அறிவித்த கரோனா சிறப்பு ஊதியத்தை வழங்க வேண்டும். ஆட்சியர் அறிவித்த தினக்கூலி ரூ.385 வழங்க வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர் முறையை ரத்து செய்து, அரசு நேரடி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவுட்சோர்சிங் ஊழியர் சங்கத் தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் முருகையன், நிர்வாகிகள் பழனிவேல், எம்பிகே.பாண்டியன், ஒப்பந்த தொழிலாளர் சங்க பொருளாளர் மணிமதி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்