திருவாரூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜன.26-ம் தேதி மேட்டுப்பாளை யத்தில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் அவதூறாக பேசியதை கண்டித்து இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
தகவலறிந்து வந்த திருவாரூர் போலீஸார் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் முஜிபூர் ரகுமான் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மேலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் நாகூர் பேருந்து நிலையம் முன்பும், புத்தூர் ரவுண்டானா அருகிலும் முஸ்லிம்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகை -நாகூர் சாலை மற்றும் புத்தூர் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நாகூர் மேற்றும் நாகை நகர போலீஸார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால், மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
காரைக்காலில் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. காரைக்கால் பழைய ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்து ஜமாத்தார்கள் அமைப்பின் தலைவர் அப்துல்லா தலைமை வகித்தார். இதில், திரளான முஸ் லிம்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago