பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை காதர் மொகிதீன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் அவதூறாகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்ட அறிக்கை:

மதவெறியைத் தூண்டும் எவரையும் அவர் சார்ந்த கட்சியில் இருந்து வெளியேற்றுவதே அந்தக் கட்சிக்கும், நாட்டுக்கும் நல்லது. பண்பட்ட தமிழகத்தை, அரசியல் மற்றும் தேர்தல் விளையாட்டுக்காக புண்பட்ட தமிழகம் ஆக்கிவிடாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு. எனவே, கல்யாணராமன் மீது தமிழக அரசு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளது: அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தை அமளிக் காடாக்க சில மதவெறி சக்திகள் திட்டம் தீட்டுகின்றன. தேர்தல் நேரத்தில் இதை தீவிரப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடவும் எண்ணுகிறார்கள்.

கல்யாணராமன் தொடர்ந்து இது போன்று பேசியும், எழுதியும் வருகிறார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற வன்முறையை வளர்க்கும் தீய சக்திகளுக்கு இடம் கொடுக்காமல் தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மக்களை பிளவுப்படுத்தும் தீய சக்திகளுக்கு எதிராக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்