ஆந்திர மாநில அரசு அனுமதி அளித்ததும் காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணி தொடங்கும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தகவல்

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநில அரசின் அனுமதி கிடைத்ததும் காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணிகள் தொடங்கும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ரயில்வே மேம்பாலம் கடந்த 1995-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதிக வாகன போக்குவரத்து காரணமாக தற்போது வலுவிழந்து காணப்படும் மேம்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் விரைவில் சீரமைப்புப் பணிகள் தொடங்கவுள்ளன. மேம் பாலம் சீரமைப்புப் பணிகள் ஒரு மாதம் நடைபெறும் என்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, ரயில்வே மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறும்போது, ‘‘காட்பாடி ரயில்வே மேம்பாலம் பலவீனமடைந்துள் ளதால் அதை சரி செய்யும் பணியில்ரயில்வே நிர்வாகம் தயாராக உள்ளது. ஒரு மாதம் இந்தப் பணிகள் நடைபெறும். தமிழக-ஆந்திர மாநி லத்தை இணைக்கும் முக்கிய சாலையாக இருப்பதால் போக்கு வரத்து மாற்றம் தொடர்பான விவரங்களை ஆந்திர மாநில அரசிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டியுள்ளது. இதற்கான கருத்துரு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஆந்திர மாநில அரசின் அனுமதி கிடைத்ததும் மேம்பாலம் சீரமைப்புப் பணிகள் தொடங்கும். சீரமைப்புப் பணி நடக்கும்போது மேம்பாலம் வழியாக வாகன போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்பதால் மாற்றுப் பாதைகள் குறித்த விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்’’ என்றார்.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், ரயில்வே முதன்மை மண்டல பொறியாளர் அபிஷேக் மிட்டல், ரயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், மாநகராட்சி ஆணையர் சங்கரன், வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்