ராணிப்பேட்டை மாவட்டத்தில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வழங்கினார்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 45 பேருக்கு அரசின் இலவச ஸ்மார்ட் செல்போன்களை ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வழங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத் தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயராமன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் தாரகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், பல்வேறு கோரிக்கை களுடன் 289 பேர் மனுக்களை அளித்தனர். இதன் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கூட்டத்தில், ராணிப்பேட்டை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய கல்லூரி படிக்கும் மாணவர்கள், சுயதொழில் செய் பவர்கள், பணிக்கு செல்பவர்களுக்கு அரசின் இலவச ஸ்மார்ட் செல்போன் வழங்கும் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்பட்டன.

87 பேருக்கு ரூ.11.13 லட்சம் மதிப்பில் செல்பான் வழங்க நடவ டிக்கை எடுக்கப்பட உள்ளது. முதற் கட்டமாக ரூ.5.76 லட்சம் மதிப்பிலான 45 ஸ்மார்ட் செல்போன் களை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்