சேத்துப்பட்டு நகரம் போளூர் சாலையில் உள்ள தூய லூர்து அன்னை தேவாலயத்தில் ஒவ் வொரு ஆண்டும் ஆண்டு பெரு விழா 11 நாட்கள் நடைபெறும்.
அதன்படி, 126-வது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, பங்கு தந்தை விக்டர் இன்பராஜ் தலைமையில் கொடி பவனி நடைபெற்றது. பக்தி மாலை பாடியபடி கொடியுடன் கிறிஸ்தவர் கள் வீதி பவனி வந்தனர். பின்னர், பங்கு தந்தை அல்போன்ஸ் கொடி யேற்றினார். இதையடுத்து நெடுங் குணம் மாதா மலையில் ஆற்காடு பங்கு தந்தை எழிலரசன் இன்று காலை கொடியேற்ற உள்ளார். பின்னர், ஆண்டு பெருவிழா வழிபாடு தொடங்குகிறது. தினசரி காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை திருத்தேர் திருவிழா நடைபெறும்.
இதன் தொடர்ச்சியாக, பேராயர் சின்னப்பா தலைமையில் நெடுங்குணம் மாதா மலைக்கு கிறிஸ்தவர்கள் தவப்பயணம் நடைபெற உள்ளது. அன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில், மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர்கள், ஆலய வளாகத்தில் நடைபெற உள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago