திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல் போகும் குழந்தை கள், ஆதரவற்ற குழந்தை களை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்கும் வகையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட காவல்துறை, தொழிலாளர் நலத் துறை மற்றும் சைல்டு லைன் ஆகியோர் மேற்பார்வையில் ‘ஆபரேஷன் ஸ்மைல் குழு’என்ற தனிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் பிப்ரவரி 1-ம் தேதி (நேற்று) முதல்15-ம் தேதி வரை திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொது இடங்களில் ஆதரவற்றுசுற்றித்திரியும் குழந்தைகள், காணாமல் போகும் குழந்தைகள், குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
இக்குழுவினர்களுக்காக பிரத்யேக வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.விஜயகுமார், ஒருங் கிணைந்த வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கண்ணன்ராதா, திட்ட மேலாளர் செந்தில், திருப்பத்தூர் எஸ்ஆர்டிபிஎஸ் தொண்டு நிறுவன இயக்குநர் தமிழரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago