நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு பாடத்திட்டம் குறைப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும், என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்போது, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி, கையேடு வழங்கப்படும்.
நீட், ஜேஇஇ போன்ற தேர்வுக்கான பாடதிட்டங்களை குறைப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும். பள்ளியில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு என தனியாக ஊதியம் வழங்கப்படுவதில்லை.
பள்ளி தலைமையாசிரியரிடம் அதற்கான ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே வழங்கப்படுகிறது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago