கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த கோனே கவுண்டனூரில் நேற்று காலை பசுங்கன்றுகள் விடும் விழா நடந்தது.
அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கன்றுகள் பங்கேற்றன. இதை வேடிக்கை பார்க்க வேப்பனப்பள்ளி சுற்று வட்டார கிராமங்கள்மட்டுமன்றி, ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் எல்லையோரக் கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொது மக்கள் வந்திருந்தனர்.
அனுமதியின்றி நடத்தப்பட்ட நிகழ்ச்சி என்பதால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை.நிகழ்ச்சியின் போது 10-க்கும் மேற்பட்ட கன்றுகள் பலத்த காயமடைந்தன. அதேபோல, விழாவில் பங்கேற்றவர்களில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு காயம் அடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago