திருப்பூரில் 2-வது நாளாக செவிலியர்கள் போராட்டம் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் தற்காலிகமாக ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், கரோனா காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய செவிலியர்களுக்கு ஒரு மாத ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். கரோனா பாதித்த செவிலியர்களுக்கு நிவாரணம் மற்றும் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2-வது நாளாக செவிலியர்கள் நேற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல உடுமலை மற்றும் தாராபுரம் அரசு மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்க மாநிலப் பொருளாளர் (புறநகர்) கீதா கூறும்போது, "கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டோம். அதேசமயம், பணிகள் பாதிக்காத வகையில் நோயாளிகளையும் கவனித்துள்ளோம். எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. வரும் 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்புகிறோம். பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்ததால், தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்