போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடக்கும். 2017-ம் ஆண்டு 13-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 14-வதுஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை 2020-ம் ஆண்டு நடத்தியிருக்க வேண்டும். கரோனா பாதிப்பு காரணமாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. அனைத்து தொழிற்சங்கங்களுடன் ஊதிய ஒப்பந்தக்குழு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், போக்கு வரத்து தொழிலாளர்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக விரைவில் தீர்வு காணக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதேபோல திருப்பூர் மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் காங்கயம் சாலையிலுள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பு தொழிலாளர் சங்கத்தினர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்