மொட்டை அடித்து விவசாயிகள் போராட்டம்

By செய்திப்பிரிவு

உயர் மின்கோபுர திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள், திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே படியூர் காவல் சோதனைச்சாவடி பகுதியில் நேற்று 11-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "இந்திய தந்தி சட்டத்தை நீக்க வேண்டும், விவசாய விளைநிலங்களில் விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் உயர் மின்கோபுர திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும், சாலையோரம் கேபிள் மூலமாக அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாத வாடகை அளிக்க வேண்டும்என்பன உட்பட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி, 300-க்கும்மேற்பட்ட விவசாயிகள் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி மொட்டை அடித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், காங்கயம் எம்எல்ஏ உ.தனியரசு மற்றும் அகில உலக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் தூரன் நம்பி உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்