கிருஷ்ணகிரி அருகே பூதிப்பட்டி ஏரி ரூ.25 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி ஒன்றியம் கங்கலேரி ஊராட்சியில் 47 ஏக்கர் பரப்பளவில் பூதிப்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாராததால் புதர் மண்டி வறண்டு காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஏரியைத் தூர்வார வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி பூதிப்பட்டி ஏரியைத் தூர்வாரி, கரையைப் பலப்படுத்தி, மதகை சீரமைத்து, ஏரிக்கோடியில் சிமென்ட் தளம் அமைக்க ரூ.25 லட்சத்து 34 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை பூதிப்பட்டி ஏரியில் நடந்தது. ஒன்றியக் கவுன்சிலர் மகேந்திரன் தலைமை வகித்தார். இதில், ஒன்றியக் குழுத் தலைவர் அம்சா ராஜன் பங்கேற்று பூமி பூஜை செய்து, தூர்வாரும் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன், ஒன்றிய இணை செயலாளர் படிகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago