ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி நாமக்கல் அரசுப் போக்குவரத்துக் கழக கிளைப் பணிமனை எதிரில் தொழிற்சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
எல்பிஃஎப் நாமக்கல் கிளைச் செயலாளர் டி. பிரகாசம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர்.தியாகராஜன், எஸ்.சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன செயலாளர் என்.முருகராஜ், சிஐடியு நிர்வாகி எம்.பழனிசாமி ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். போராட்டத்தில், 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தின்போது வலியுறுத் தப்பட்டன. தொழிற்சங்க நிர்வாகிகள் ஆர்.முருகேசன், எஸ்.பாலகிருஷ்ணன், டி.பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் எதிரில் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தொமுச கிளைச் செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் குழந்தைசாமி முன்னிலை வகித்தார். இதில் சிஐடியு கிளைச் செயலாளர் சரவணன் மற்றும் ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், டிடிஎஸ்எப் போன்ற தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்துக் கழக நகர் மற்றும் புறநகர் பணிமனை கிளை எதிரில், அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. தொமுச பொதுச்செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். நகர் கிளை தொமுச தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.இதேபோல், புறநகர் பணிமனை முன்பு நடந்த உண்ணாவிரப்போராட்டத்துக்கு பணிமனை தலைவர் வாசுதேவன் தலைமை வகித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago