திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ந்து லஞ்சம் பெறப்படுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில், டிஎஸ்பி நந்தகோபால் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன் தினம் மாலை மன்னார்குடி சார்பதிவாளர் அலுவலகத் துக்குச் சென்றனர்.
அங்கு, அலுவலகத்திலி ருந்த சார் பதிவாளர் சங்கீதா, அலுவலக எழுத்தர் செந்தில்குமார் மற்றும் புரோக்கர் சேகர் ஆகியோரி டம் விசாரணை நடத்திய போலீஸார், அலுவலகம் முழு வதும் சோதனை நடத்தினர். இந்த சோதனை நேற்று அதிகாலை 3 மணிவரை நீடித் தது. பின்னர், போலீஸார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி நந்தகோபால் கூறியது:
மன்னார்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.40,600 மற்றும் யாரிடம் லஞ்சம் பெறப்பட்டது என்பது பற்றி குறிப்பு எழுதப்பட்ட துண்டுச் சீட்டு ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக, சார் பதிவாளர் சங்கீதா, எழுத்தர் செந்தில் குமார், சார் பதிவாளர் அலு வலகத்துக்கு வந்துசெல்லும் சேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago