புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியது:
தடுப்பு மருந்து வரும்போது வதந்திகள் வருவதும் இயல் பானது. எனினும், வதந்திகள் தவிர்க்கப்பட வேண்டும். 12 லட்சத்துக்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள் தமிழகத் துக்கு வந்துள்ளன. இதுவரை சுமார் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பிப்.1-ம் தேதி முதல் அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப் பட உள்ளது. இன்று (ஜன.31) போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு தமிழகத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கும், கரோனா காலத்துக் கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கி றேன். எனவே, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை தவறாமல் கொடுக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago