தமிழகம் முழுவதும் மாசு ஏற்படுத்தும் பிரச்சினைகளுக்கு திமுக துணை நிற்காது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழகம் முழுவதும் மாசு ஏற்படுத்தும் பிரச்சினைகளுக்கு திமுக துணை நிற்காது என உறுதியளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பனப்பாக்கத் தில் திமுக சார்பில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்றுமாலை நடைபெற்றது. இதில், ராணிப்பேட்ட மாவட்டச் செயலாளரும் சட்டப் பேரவை உறுப்பினரு மான ஆர்.காந்தி வரவேற்றுப் பேசி னார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘திமுக தனி மனித இயக்கம் அல்ல.திமுக தமிழர்களின் இயக்கம், தமிழர்களுக்கான இயக்கம். தமிழினத்துக்கான, தமிழர்களின் மேன்மைக்கான, தமிழர்களின் வளர்ச்சிக்கான இயக்கம்.

தமிழர்களை மானமுள்ள, மொழிப்பற்றும், இனப்பற்றும் உள்ளவர்களாக வளர்க்க நினைத் தார் பேரறிஞர் அண்ணா. இந்தியா விலேயே வளர்ச்சி பெற்ற மாநிலமாக தன்னிறைவு பெற்ற மாநில மாக உருவாக்க பாடுபட்டார் கருணாநிதி.

கல்வியில் சிறந்த தமிழகத்தை ‘நீட்’ தேர்வில் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலமாக அதிமுக அரசு மாற்றிவிட்டது. தொழில் துறை யில் முன்னேறிய தமிழகத்தை 14-வது இடத்துக்கு கொண்டு சென்றுவிட்டனர். நிம்மதியாக இருந்த விவசாயிகளை விரட்டும் அரசாக மாறிவிட்டது. வேலை யில்லாதவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக இந்த அரசு மாற்றி விட்டது. கழகம் உருவாக்கிய தமிழகத்தை உருக்குலைக்க ஒருக்காலும் நாம் விடமாட்டோம்.

நான் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது, முதல் முறையாக மழலையர் பள்ளிகளை தொடங்கினேன். தனியார் பள்ளிக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்தினேன். அடுத்து திமுக ஆட்சிதான் அமை யும். உங்கள் கவலைகள் யாவும் தீரும்’’ என்றார்.

முன்னதாக நிகழ்ச்சியில் கோரிக்கை வைத்தவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘தமிழகத்தில் ஊழல் பட்டியலில் எடப்பாடி முதல் அமைச்சர்கள் வரை கணக்கெடுத்தால் யார் அதிகம் லஞ்சம் வாங்கியது என்று பார்த்தால் உள்ளாட்சி துறை அமைச்சர் தான் முதலில் உள்ளார். கரோனா பரிசோதனை கருவியிலும் கொள்ளையடித்தனர். எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்தாலும் சிறைக்கு செல்லும் நிலை வரும். ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் மாசு ஏற்படுத்தும் பிரச்சினை களுக்கு திமுக துணை நிற்காது என்ற உறுதியை அளிக்கிறேன்’’ என்றார்.

இரவில் கிடைத்த நிவாரணம்

‘‘ஆரணியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி யில் எழிலரசி என்பவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பக்கத்து வீட்டில் ஏற்பட்ட சிலிண்டர் விபத்தில் தனது வீட்டின் சுவர் இடிந்து விழுந்த தில் தனது தாய் இறந்துவிட்டார் என்று தெரிவித்தார். இப்போது, தானும் தனது சகோதரரும் நடுத்தெருவில் இருக்கிறோம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம்தமிழக அரசு சார்பில் அறிவிக்கப் பட்ட ரூ.2 லட்சம் நிவாரண உதவி கிடைக்கவில்லை. பல இடங்களில் மனு அளித்தும் பதில் இல்லை என்று தெரிவித்திருந்தார். எழிலரசியின் தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால் புதுடெல்லியில் இருந்த நாடாளு மன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு மூலமாக ராணுவ அமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை நம்மைவிடஅதிமுகவினர் அதிகம் பார்க்கின்ற னர். அதுவும் அமைச்சர்கள் பார்த்துவிடுகிறார்கள். எழிலரசியின் புகாரை கேள்விபட்டதும் அவரை அழைத்து கூட நிவாரணம் வழங்காமல் இரவோடு இரவாக அவரது வங்கிக் கணக்குக்கு ரூ.2 லட்சம் பணத்தை அனுப்பியுள் ளனர். இதுதான் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றிக்கு ஆதாரம்’’ என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காலத்தில் சமூக சேவையாற்றியவர்கள், விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்