குடிநீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க மனு

By செய்திப்பிரிவு

மனிதநேய மக்கள் கட்சி மேலப்பாளையம் 38- வது வார்டு கிளை தலைவர் ராகத் செய்யது அலி திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனு:

மேலப்பாளையத்தில் 38-வது வார்டுக்கு உட்பட்ட சேக் முகம்மது மூப்பன் தெருவில் சிறிய குடிநீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். சில மாதங்களாக குடிநீர் தொட்டியின் மோட்டார் மற்றும் பைப் லைன்கள் உடைந்து பயன்பாடில்லாமல் உள்ளது.

பொதுமக்கள் தண்ணீருக்காக அலைகின்றனர் . எனவே, போர்க்கால அடிப்படையில் குடிநீர் தொட்டியை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்