திருநெல்வேலி காந்திமதி அம்மன் உடனுறை நெல்லையப்பர் கோயில் தைப்பூசத் திருவிழாவில் சவுந்தர சபா மண்டபத்தில் நடராஜர் திருநடனக் காட்சி நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த 19-ம் தேதி தைப்பூசத் திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்மனுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கடந்த 22-ம் தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவமும், நேற்று முன்தினம் தைப்பூசத்தையொட்டி சிந்துபூந்துறை தைப்பூச மண்டபத்துக்கு எழுந்தருளிய சுவாமிகளுக்கு தாமிரபரணியில் தீர்த்தவாரியும் நடைபெற்றது.
தொடர்ந்து கோயிலில் உள்ள சவுந்தரசபா மண்டபத்தில் நடராஜர் திருநடனக்காட்சி நேற்று நடைபெற்றது. நடராஜரின் திருநடனத்தை கண்டு அம்மன் மெய்மறந்த நிலையில், சுவாமி திடீரென மறைந்தது, ரதவீதியில் சுவாமியை தேடி வந்தபோது சந்திபிள்ளையார் கோயில் அருகே அம்மனுக்கு நெல்லையப்பர் காட்சி கொடுத்தது ஆகிய புராண வரலாறை சித்தரிக்கும் வைபவமும், தீபாராதனையும் நடைபெற்றது. இன்று வெளித்தெப்பக்குளத்தில் பஞ்சமூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு தெப்பத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.]
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago